மட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

மட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம்(28) மட்டக்களப்பு பொதுசந்தையில் 47 பேருக்கு எழுமாற்றாக PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையானது சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பொதுசந்தை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொதுச்சந்தையில் வெளிமாவட்ட வியாபாரிகளுடன் நேரடி தொடர்புடைய வியாபாரிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை மட்டக்களப்பு அரசடி தாமரைக்கேணி கோட்டமுனை உப்போடை ஆகிய பொதுச்சுகாதார பிரிவுகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான PCR பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி கே. கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினால் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனை முடிவுகளின் படி பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 47 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பொது சுகாதார வைத்திய அதிகாரி கே. கிரிசுதன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.