வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனின் ஊடகவியலாளர் சந்திப்பு.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனின் ஊடகவியலாளர் சந்திப்பு வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்றது.

தற்போது யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போதைய கொரோனா நிலைமைகள் மற்றும் தனிமைப்படுத்தல் விடயங்கள் தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்தார்.
காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் தற்போதைய நிலையில் நவம்பர் மாதத்தில் இன்று வரையான காலப்பகுதியில் 27கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 பேரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 பேரும் முல்லைத்தீவில் இருந்து 2 பேருமாக மொத்தமாக நவம்பர் மாதத்தில் 27 பேர் நவம்பர் மாதத்தில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

நவம்பர் மாதத்தில் வடக்கு மாகாணத்தில் 7682 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இவர்களில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திலே காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குரிய PCR பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கிடைக்கின்ற முடிவுகளின் பிரகாரம் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.

நேற்றைய தினம் சில பத்திரிகைகளில் தவறான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாடு முடக்கப்படும் என அது ஒரு தவறான செய்தியாகும். தற்போதைய சூழ்நிலையில் யாழ் மாவட்டத்தினை முடக்க வேண்டிய தேவையில்லை. எனினும் காரைநகர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் PCR முடிவுகளின்படி தீர்மானம் எடுக்கப்படும். மேலும்,யாழ் மாவட்டத்தில் இயங்கி வந்த மருதங்கேணி கோரணா சிகிச்சை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அங்கிருந்த 30 நோயாளர்களை நேற்று கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.