வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் தற்போது மையம்

Tamil Nadu Weather Forecast, Cyclone Puravi Latest Updates: தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததை அடுத்து அதற்கு புரெவி எனப் பெயரிடப்பட்டது. இந்த புரெவி புயல் நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படியே நேற்று இரவு திரிகோணமலை அருகே புயல் கரையைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் இருக்கும் புரெவி புயல், இன்று பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கு இடையே புயலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு இலங்கையில் புரெவி புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கொட்டித் தீர்க்கும் கனமழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் 209 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.