சஜித்தின் பெயரையும் படத்தையும் அகற்ற உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தி பிரதான காரியாலயத்தில் பகிரங்கமாக தெரியும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவின் படம் மற்றும் பெயரை அகற்றுமாறு இன்று (25) தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயததுக்கு நேரடியாக சென்ற தேர்தல் ஆணைய அதிகாரிகளும் போலீசாரும் அந்த கட்டளையை எழுத்து மூலம் வழங்கினர்.

சஜித் பிரேமதாச இம்முறை தேர்தல் அபேட்சகர் என்பதால் சுவரொட்டிகளில் அவரது பெயர் வெளியில் தெரிய காட்சிப்படுத்துவது தடை என அவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.