தமிழினத்தை அழிக்கவே முடியாது! சாணக்கியனின் முழுமையான பேச்சு (வீடியோ)

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசபுத்திரன் சாணக்கியன், இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சிங்களம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் எடுத்துரைத்து பேசியதுடன் அவனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அவருடைய உரை வருமாறு,

“நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர். நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்புவாக்களை பெற்றுக் கொண்டே இந்த நாடாளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுள் 29 வயதான அரச ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் முகப்புத்தகத்தில் சில பதிவுகள் Tag செய்யப்பட்டுள்ளதாம். இதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்துள்ள அரசாங்கம் அவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இவர்களை கைது செய்வதற்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை கைது செய்து சிறையிலடையுங்கள். குற்றம் செய்தவர்களை சிறையிலடையுங்கள்.

அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதனை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன். அதேபோன்று அரசாங்கம் ஏனைய விடயங்களை மறைப்பதற்ககாக இவ்வாறு அப்பாவி இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும். கார்த்திகை விளக்கீடு என்பது ஒரு சமயம் சார்பான நிகழ்வு. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்தீகை விளக்கேற்ற தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருசில இடங்களில் மக்கள் விளக்கினை ஏற்றுவதற்காக சிறிய அலங்காரங்களை செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர். அமைதியான சமய நிகழ்வில் அட்டூழியம் செய்துள்ளனர்.

அத்துடன் ஓர் குடும்பம் யுத்தத்தால் இழந்த தனது குடும்ப உறுப்பினருக்கு விளக்கேற்றுவதில் என்ன தவறு இருக்கின்றது அது தகப்பன் தாய் மற்றும் சகோதரர்களுக்கானதாக இருக்கலாம் இதில் என்ன தவறு இருக்கின்றது.

உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை முதலில் செலுத்துவார்கள்இதனை முதலில் பழகிக்கொள்ளுங்கள் .உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றிய போது. சரத்வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட முடிந்ததாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் எமது நாட்டிலிருக்கும் அடுத்த சிறுபான்மையினரான முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு தொடர்ந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் தங்களுக்கு இறுதியாகவுள்ள உரிமையினையே கேட்கின்றனர். அதனை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் மட்டக்களப்பில் உள்ள ஒரே ஒரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரை தவிர அனைவரும் அரசுக்கு சார்பாக 20 ஆவது திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருந்தனர்.

ஏன் அரசாங்கம் எமது நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமான சீனாவின் முதலீடுகளை பற்றிய கவலைகளில் அதிகமாக உள்ளது. இவர்களின் முதலீடுகளினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரலாறுகளை ஓர் முறை நோக்குவோம்.

எமது நாட்டுக்கு பாரியளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் உல்லாச பயண துறையானது எமது வட கிழக்கில் இன்னும் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது.ஏன் சில இடங்கள் தவிர்க்கப்படுகின்றன இங்கு புகையிரத பாதைகள் ,துறைமுகங்கள் மற்றும் விமான தளங்கள் அமைத்து உல்லாச பயண துறைக்கு ஏற்ற வகையில் இடங்களை அமைக்கவேண்டும் அத்துடன் இந்தியாவின் கேரளா போல் வனப்பு உள்ள எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை வளங்களை வைத்து உல்லாச பயணத்துறைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் வேண்டும். வட கிழக்கில் வளங்கள் பல காணப்பட்டாலும் ஏன் அரசு பாராபட்சமாக இருக்கின்றது.

தொல்பொருள் திணைக்களங்கள் எமது காணிகளை சுவீகரிப்பதனையும் கையகபடுத்தலையும் விடுத்து ஏன் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக திட்டங்களைக் கொண்டு வரக்கூடாது.

வடகிழக்கில் உள்ள மனிதவள ஆளுமைகளை உல்லாச பிரயாண துறைக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் கொடுத்து எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வேண்டும். இங்குள்ளவர்களுக்கு சந்தர்பத்தை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் சர்வதேச தர வீரர்களுடன் களத்தில் இறங்கியிருக்கும் ஒரு தமிழ் வீரனாக விஜயகாந் வியாஸ்காந் இக்கு எனது பாராட்டுக்களையும் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாராளுமன்ற உரை வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.