கலை இயக்குனர் பி கிருஷ்ணமூர்த்தி காலமானார்

கலை இயக்குனர் பி கிருஷ்ணமூர்த்தி சென்னையில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் பி கிருஷ்ணமூர்த்தி. அதிலும் குறிப்பாக வரலாற்று திரைப்படங்கள் என்றால் பி கிருஷ்ணமூர்த்திதான் என்று சொல்லும் அளவுக்கு பெயரெடுத்தவர். தான் பணிபுரிந்த படங்களுக்காக 3 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

அவர் பணியாற்றிய படங்களில் இம்சை அரசன் 23ம் புலிகேசி, நாடோடி தென்றல்’ வண்ணப்பூக்கள் மற்றும் பழசிராஜா ஆகியவை முக்கியமானவை. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் நேற்று சென்னையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு திரையுலகினர் தங்கள் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.