பெருந்தோட்டத்துறை சுகாதாரமானது அரச சுகாதாரதுறையுடன் இணைக்கப் படவேண்டும்.

இலங்கை பெருந்தோட்டத்துறை சுகாதாரமானது அரச சுகாதாரதுறையுடன் இணைக்கப் படவேண்டும்.

பெருந்தோட்ட சுகாதாரம் தேசியமயப்படுத்தல் தொடர்பில் கடந்த பல வருடங்களாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு அரச மட்டத்தில் கவனயீர்ப்பைப் பெற்று முன்னேற்றகரமான செயற்பாடுகளைக் கொண்ட போதிலும் கொரோனா தொற்றுக் காலத்தில் அல்லது அசாதாரண சூழ்நிலைகளின்  போது தோட்ட மக்களுக்கு ஏற்படும் சுகாதார ரீதியான பாதிப்பை குறைப்பதற்கு பெருந்தோட்ட சுகாதாரத் துறையை அரச சுகாதார துறையுடன் இணைப்பதற்கான  நடவடிக்கை யை அரசாங்கம் துரிதகதியில் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் பெருந்தோட்ட  சமூச அரச சுகாதார சேவைகளை அணுவதற்கான நியாயமாக பிரச்சாரம் என்னும் தலைப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இலங்கை பெருந்தோட்டத்துறை சுகாதாரநிலைமைகள் காலணித்துவக்காலத்துடன் ஒப்பிடுகையில் இன்றுவரை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளமை அவதானிக்கத்தக்கது.

எவ்வாறெனினும் ஏனைய துறைகளுடன்பார்க்கும்போது பெருந்தோட்டசுகாதாரம்மற்றும் சமூக,பொருளாதாரதுறைகள்மிகபின்தங்கியநிலைமையிலேயே காணப்படுகின்றன. இலங்கையில் இன்றைய சுகாதார கொள்கை அனைவருக்கும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றது.

எனினும் சில பிரித்தானிய காலசட்டவிதிகள் திருத்தப்பட வேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 1908ம்ஆண்டு இல 36 மருத்துவபதிவுதிருத்தசட்டத்தின் கீழ்பிரித்தானியகாலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களின் மருத்துவம் சுகாதாரம் தொடர்பான தேவைகளை கவனிப்பதற்கு தோட்டமருந்தகங்களும், மருத்துவரகளும்  நியமிக்கப்பட்டார்கள்.

இன்று இலங்கை பல்வேறு துறைகளிலும் மிக முன்னேற்றகரமான நிலைமையை நோக்கிசென்றுக்கொண்டிருக்கின்றது. அத்துடன் மத்தியதரவருமானம் பெறுகின்ற நாடாகவும் காணப்படுகின்றது. 2020ஆம் ஆண்டில் இலங்கையின் மனித அபிவிருத்தி சுட்டெண்னானது 76 ஆக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பெருந்தோட்டமக்களின் சுகாதாரபிரச்சினைகளை கருத்தில் கொண்டு, மனித அபிவிருத்தி தாபனமானது, பெருந்தோட்ட சுகாதாரம் தேசியமயப்படுத்தல் தொடர்பாககடந்த பலவருடங்களாக பல்வேறு செயறபாடுகளை மேற்கொண்டுவந்துள்ளது.

அந்தவகையில் பெருந்தோட்ட சுகாதார நிலை தொடர்பாக ஆய்வினைமேற்கொண்டது. ஆய்வு புத்தகமானது, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் சுகாதாரதுறை மேலதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மலையகபெருந்தோட்டசுகாதாரம் தேசியமயமாக்கல் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள்,பாராளுமன்ற அமைச்சர்கள்,பாராளுமன்ற உறப்பினர்கள்,பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் அதிகாரிகள்,புத்தி ஜீவிகள் மற்றும்சிவில் அமைப்பு பிரதிநிதிகள் போன்றோருடன் மனித அபிவிருத்தி தாபனம் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டன.

மலையக பெருந்தோட்டசுகாதாரம் தேசியமயமாக்கல் தொடர்பாக வைத்தியதுறைசார்ந்த உயர்அதிகாரிகள், ஏனைய துறைசார்ந்த நிபுணர்களுடனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுகாதார துறைசார்ந்த பாராளுமன்ற குழு கூட்டத்தில கலந்து கொண்டபோது பெருந்தோட்ட சுகாதாரம் அரச சுகாதாரதுறையுடன் ஒருங்கிணைத்தல் தொடர்பான உபாயத்திட்டம் ஒன்றை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது. அதற்கமைய  கலாநிதி ரமேஷ், ரவிராம் ஆகியோர் மேற்படி கூட்டத்தில் கலந்துக்கொண்டு திட்டவரைபை சமர்ப்பித்தோம்.  அச் சந்தர்ப்பத்தில் குழு தலைவராகமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ்  இருந்தார்.

பாராளுமன்றஉறுப்பினர்கள் சுகாதர அமைச்சின் அதிகாரிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சு, நிலம் சம்பந்தமான அமைச்சுஇ நிதி அமைச்சு, நிலம் கையகப்படுத்தல்  திணைக்களம்,பெருந்தோட்ட மனதவள நிதியத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இவ் வரைபுசமர்ப்பிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டுசெப்டெம்பர் மாதம் இடம் பெற்ற மலையக  சுகாதாரத்தை தேசிய மயமாக்கல் தொடர்பான  உயர் மட்டகலந்துரையாடல்களின்போது, தோட்ட சுகாதார நிலைமைகள், அரசாங்கம் உருவாக்கிவரும் கொள்கைகள்,தோட்ட சுகாதாரத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள பிரச்சினைகள்,தோட்ட கம்பனிகளின் நிலைப்பாடு குறித்த கலந்துரையாடலகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறே இச் சந்தர்ப்பங்களில் பெருந்தோட்டத்துறையின் சுகாதாரபிரச்சினைகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.
பெருந்தோட்டத்துறை சுகாதாரத்தை தேசியமயப்படுத்துதல் சம்பந்தமாக ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு மற்றும் நடைமுறை அறிவு, பல்வேறு கலந்துரையாடல்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குழுவினால் முதற்கட்டமாக மலையகத்தைசார்ந்த 50 வைத்திசாலைகள் உள்வாங்கப்படுவதற்கான ஆலோசனையின்படி பிராந்திய   சுகாதார பணிமனை  மற்றும் மனித அபிவிருத்தி தாபனம் என்பன இணைந்து 50 வைத்தியசாலைகளை தெரிவு செய்து பெயர் பட்டியலை முன்மொழிந்தது. அதனை அப்போது பாராளுமன்ற சுகாதார சுகாதார துறைசார்ந்த குழுவின் தலைவராக இருந்த திரு.திலகராஜ்  இவ் அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித் மேற்படி கலந்துரையாடல்களுக்கு பின்சுகாதார அமைச்சு, பிராந்திய சுகாதார பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரிகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட திட்டவரைபில் எவ்வாறு தோட்ட மட்ட வைத்தியசாலைகள் தெரிவு இடம்பெற்றுள்ளது என மனித அபிவிருத்திதாபனம் தெளிவுப் படுத்தியது.
இப்பிரச்சினைக்கு நல்லதொரு முடிவை நோக்கி மனித அபிவிருத்தி தாபனம் மீண்டும் புதியஅரசாங்கத்திடம் இக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக பெருந்தோட்ட சுகாதாரத்துறையை அரச சுகாதாரதுறையுடன் ஒருங்கிணைத்தல் தொடர்பாக புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது.

இத்திட்டத்தினைமேலும் முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலானது நுவரெலியாவில் இடம்பெற்றபோது தோட்டமற்றும் நகர சுகாதார பிரிவு பணிப்பாளர்  முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், முன்னாள் தோட்ட மனிதவள நிதியதலைவர் மற்றும்  மனித தாபனத்தின் இயக்குனர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம ஆகியோர் கலந்து கருத்துகளைபதிவுசெய்தமை குறிப்பிடதக்கது.
புதிய அரசாங்கமானது பெருந்தோட்ட. சுகாதாரத்துறையை தேசிய மயமாக்கல் தொடர்பாககவனம் அவ்வாறே இக்காலகட்டத்தில் உலகமக்கள் கொவிட் 19 நோயுடன் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதுடன் இக் கொடியவைரசோடு எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓவ்வொறு மனிதனும் தன்னையும் பாதுகாத்து மற்றவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் காணப்படுகின்றான்.

இச் சூழ்நிலையில் மலையக மக்கள் இன்றும் சுகாதார ரீதியான வசதி வாய்ப்புக்கள் இன்றி காணபடுகின்றனர்.
எனவே இவ்வாறானஅசாதாரண சூழ்நிலைகளின் போது மலையகதோட்டதுறை சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைந்து காணப்பட்டால் அம்மகளுக்கு ஏற்படும் சுகாதார ரீதியான பாதிப்பை குறைபபதற்கு வழிவகுக்கும்.

அவ்வாறே நமது நாட்டில் வருமானத்தை பெற்றுதர கூடியதுறைகள் பாதிப்பு அடைந்த சூழ்நிலையிலும்  வருமானத்தை பெற்றுதருவதில் பெருந்தோட்டதுறை முதன்மையானதாக காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

அரசாங்கம் பெருந்தோட்டதுறைவருமானத்தைதக்கவைத்துகொள்ளவேண்டுமானால்  இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் குடும்பங்களையும் கொவிட்- 19 நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும். எனவேஅரசாங்கம் பெருந்தோட்டதுடன் இணைப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.