ஆயிரம் ரூபா குறித்து இறுதி முடிவு இல்லை; கூட்டு ஒப்பந்தப் பேச்சு மீண்டும் ஒத்திவைப்பு.

ஆயிரம் ரூபா குறித்து இறுதி முடிவு இல்லை; கூட்டு ஒப்பந்தப் பேச்சு மீண்டும் ஒத்திவைப்பு.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சு இன்று தொழில் அமைச்சில் நடைபெற்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் கலந்துகொண்டார்.

இதன்போது முதலாளிமார் சம்மேளனத்தால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவுள்ள விடயங்களை நீக்குவது பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ஆனாலும், ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சு மீண்டும் டிசம்பர் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் எனத் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை அரசும் முன்வைத்துள்ளது. எனினும், அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுமா என்பது பற்றி எதுவும் நடைபெறவில்லை. அதேவேளை, ஆயிரம் ரூபா எவ்வாறு கிடைக்கும் என்பது பற்றி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.