தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே சரத் வீரசேகர.

தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே சரத் வீரசேகர.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் விக்கி

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வையும் கொடுத்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருக்கின்றார் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு  கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபை முறைமை தேவையற்றது என சரத் வீரசேகர போன்றோர் குறிப்பிடும்போது, அரசில் அங்கங்கம் வகிக்கும் வேறு சிலர், மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது எனத் தெரிவித்து வருகின்றனர்.

‘இலங்கை சிங்கள நாடு, தமிழ் மக்களுக்கென்று எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் வழங்கப்படக் கூடாது’ என்ற சரத் வீரசேகரவின் கருத்து பிழையானது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக இருந்ததில்லை.

அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதால், இலங்கை மக்களிடையே சௌஜன்யமும், நல்லுறவும் ஏற்படாது.

மேலும், அவருடைய கருத்தை வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.