யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இன்று மூவருக்குக் கொரோனா.

யாழ்ப்பாணம், கிளிநொச்சியில்
இன்று மூவருக்குக் கொரோனா

யாழ். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கிளிநொச்சி – பாரதிபுரத்தைச் சேர்ந்த இருவருக்கும் என வடக்கில் இன்று மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 412 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவருக்கும், வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள வெளிமாகாணங்களைச் சேர்ந்த மூவருக்கும் என 6 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 124 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.