சகோதரி அபயா கொலை: கேரள கத்தோலிக்க பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை !

கத்தோலிக்க கன்னியாஸ்திரி அபயா கொலை தொடர்பான வழக்கில் தந்தை தாமஸ் கோட்டூர் மற்றும் சகோதரி செஃபி ஆகியோரை குற்றவாளியாக திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கண்டறிந்துள்ளது, மேலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) மற்றும் பிரிவு 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ்  தந்தை தாமஸ் கோட்டூர்( 69)மற்றும் செபி(55) ஆகியோர்.  கொலை செய்த குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்.

 

சகோதரி அபயா வழக்கில் 229 பக்க தீர்ப்பில், கத்தோலிக்க கன்னியாஸ்திரி சகோதரி அபயா “கொலை நோக்கத்துடன்” தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிரியார் தந்தை தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் கன்னியாஸ்திரி சகோதரி செபி ஆயுள் தண்டனையும் தலா ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தனித்தனியாக, ஆதாரங்களை அழித்ததற்காக இருவருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டயத்தின் பி.சி.எம் கல்லூரியில் உளவியல் பேராசிரியராக பாதிரியார்  தாமஸ் கோட்டூர் வேலைபார்த்து வந்தார். மேலும் அப்போதைய பிஷப்பின் செயலாளராகவும் இருந்தார்.  பின்னர் அவர் கோட்டையத்தில் க்னாயா கத்தோலிக்க மறைமாவட்டத்தின் அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.

கொலைகாரி செபி,  சகோதரி அபயா  தங்கியிருந்த ஹாஸ்டலில் தங்கியிருந்ததுடன் ஹாஸ்டலின் பொறுப்பாளராகவும் இருந்தார்.

Sister Abhaya Case: Sister Abhaya's murder; Priest, nun sentenced to life imprisonment | Thiruvananthapuram News - Times of India

சிபிஐ அறிக்கையின் படி, 21 வயதான சகோதரி அபயா  1992 மார்ச் 27 அன்று பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் செஃபி ஆகிய இருவரும் விடுதி அறையில் தகாத நிலையில் இருப்பதை  அதிகாலை 4.15 மணியளவில் சமையலறைக்குச் சென்ற போது தற்செயலாக கண்டு விடுகிறார்.  தங்களுடைய தகாத உறவு வெளி உலகுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் சகோதரி அபயாவை கோடாலியின் பின் புறத்தால் செஃபி தாக்கி,   குற்றத்தை மூடிமறைக்க அபயாவின் உடலை கிணற்றில் வீசியுள்ளனர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆரம்பத்தில் பொலிஸ் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகளால் “தற்கொலை  மரணம்” என தெரிவிக்கப்பட்டது. மக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனுக்கள் காரணமாக, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

மற்றொரு பாதிரியார் ஜோஸ் பூத்ரிக்காயில் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் இல்லாததால் 2018 இல் தள்ளுபடி செய்யப்பட்டன.

கொலை வழக்கில் நீதியைத் தொடர போராடிய குழுவின் உறுப்பினரான மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் புதன்புரைக்கல் “சகோதரி அபயாவின் வழக்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

jomon puthanpurakkal abhaya case

Jomon Puthenpurackal & Abhaya

சகோதரி அபயாவின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவரது சகோதரர் பிஜு தாமஸ் தீர்ப்பில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். “தீர்ப்பில் கடவுளின் தலையீட்டை நான் காண்கிறேன்” என்று அவர் தொலைக்காட்சி சேனல்களிடம் கூறினார்.

“சகோதரி அபயாவுக்கு  தலையில் ஏற்பட்ட காயத்தின் தன்மையைப் பொறுத்தவரை, அது மரணத்தை ஏற்படுத்துவதற்கு போதுமானது … இங்கே சாத்தியமான ஒரே அனுமானம், சகோதரி அபயா குற்றம் சாட்டப்பட்டவரால் அவரைக் கொல்லும் நோக்கத்துடன் தாக்கப்பட்டார் என்பதுதான்” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாட்சியங்களை அழிக்க முற்பட்டதுடன்  குற்றம் சாட்டப்பட்டவர் கன்னியாஸ்திரிகளின் உடலை கிணற்றில் எறிந்ததாகவும், ஆதாரங்களை அழிக்கவும், விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொலை நடந்த இடம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக ஒரு கான்வென்ட் என்று இருப்பதை நீதிமன்றம் கவனித்தது. “இது ஒரு கான்வென்ட் என்பதால் , ஆண்கள் இருப்பு முற்றிலும்  தவிர்த்து, சந்தேகத்திற்கு இடமின்றி தடைசெய்யப்பட்ட ஒரு இடம் ஆகும். கொலை செய்யப்பட்ட நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட தந்தை தாமஸ் கோட்டூர் கான்வென்ட்டில் இருந்தது “மோசமான நடத்தை” என்பதைக் குறிக்கிறது. மேலும் கொலை செய்யப்பட்டது ஒரு கன்னியாஸ்திரி, அதாவது ‘கிறிஸ்துவின் மகள்” என்று நீதிமன்றம் கூறியது.

நீதிமன்றத்திற்கு உதவிய பிற சான்றுகள்:

  • கான்வென்ட்டில் அபயாயாவின் தோழிகள்; கொல்லப்பட்ட சகோதரி அபயா மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வந்திருந்தாகவும், எனவே தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் சான்றளித்தனர்.
  • குற்றம் சாட்டப்பட்ட  மத குருக்கள் கான்வென்ட்டுக்கு அடிக்கடி வந்து போயிருந்துள்ளனர். கான்வென்ட்டு சமையல்காரர் கூற்றுப்படி , கொலை நடந்த நாளில் நாய்களின் எந்த குரைப்பும் கேட்கப்படவில்லை என்பதும் , மடத்திற்குள் வந்தவர்கள் நாய்க்கு பரிசயமானவர்கள் என்பதைக் குறிக்கிறது.
  • குற்றம் நடந்த நாளில் கான்வென்ட் வளாகத்திற்குள் நுழைந்த திருடனான ராஜு சம்பவத்தை நேரில் கண்டதாக சொன்ன  சாட்சியம், இந்த வழக்கில் நீதியை உறுதி செய்வதில் மிக முக்கியமானதானது.

சம்பவத்தை நேரில் கண்ட திருடனான ராஜு மற்றும் குற்றவாளியான தந்தை தாமஸ் கோட்டூர்

1992 ல் சகோதரி அபயாவைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரிக்கு சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

சிபிஐ சிறப்பு நீதிபதி கே சனல் குமார் , தந்தை தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ரூ .6.5 லட்சம் அபராதம் விதித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற குற்றவாளி, சகோதரி செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ . 5.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.