பூநகரி  பச்சிலைப்பள்ளி ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம்!

பூநகரி  பச்சிலைப்பள்ளி ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம்!

பூநகரி, பச்சிலைப்பள்ளி மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்களுக்கு இடமாறுதல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேச செயலராக செயற்பட்டு வரும் எஸ்.கிருஸ்ணேந்திரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராக கடமையாற்றி வந்த பரமோதயன் ஜெயராணி ஒட்டிசுட்டான் பிரதேச செயலராகவும், ஒட்டிசுட்டான் பிரதேச செயலராக கடமையாற்றி வரும் த.அகிலன் பூநகரி பிரதேச செயலராகவும் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவ் இடமாற்றமானது எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.