புதுக்குடியிருப்பு சந்தையிலுள்ள அனைத்து கடைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

புதுக்குடியிருப்பில் மறுஅறிவித்தல் வரை சந்தை வணிகங்கள் பூட்டு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மரக்கறி,மீன் வியாபாரிகள் அனைவரும் மறு அறிவித்தல்வரை வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்கள்.

வடமாகாண சுகாதரபணிப்பாளரினால் வடக்கில் உள்ள சந்தைகள் அனைத்தும் பூட்டுமாறு அறிவித்துள்ளதை தொடர்ந்து சந்தை வியாபாரிகள் நடமாடும் வியாபாரம் ஊடாக வீதிகளில் மீன்,மரக்கறி,வெத்திலைகடையினை போட்டு வியாபாரம் செய்து வந்துள்ள நிiயில் நேற்று கொரேனா தொற்று இனம்காணப்பட்ட மரக்கறி இறக்குமதியாளர் ஒருவரால் புதுக்குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.

இன்னிலையில் புதுக்குடியிருப்பு சந்தையில் உள்ள மரக்கறி,மீன்,வெத்திலை,பழக்கடை,புடவைக்கடைகள்,பலசரக்கு கடைகள் அனைத்தும் மறு அறிவித்தல் பிரதேசத்தில் எந்த பகுதியிலம் வியாபாரம் செய்யவேண்டாம் என பிரதேச சபை மற்றும் பொலீசார் அறிவித்துள்ளார்கள்.

இன்னிலையில் இன்று(27) புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் படையினர்,பொலீசார் சுகாதார பிரிவினர் இணைந்து சந்தையினை தொற்று நீக்கம் செய்வதுடன் புதுக்குடியிருப்பு நகர்பகுதியினையும் தொற்று நீக்கம் செய்து வருகின்றார்கள்

Leave A Reply

Your email address will not be published.