மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கோரியது அமெரிக்க காவல்துறை

உலக வல்லரசான அமெரிக்காவில் கறுப்பின சகோதரர் ஒருவர் அமெரிக்க பொலிசாரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக அமெரிக்க மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுக்க முடியாத நிலையில் அமெரிக்க பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்புக்கோரியுள்ளனர்.

காவல்துறைக்கெதிரான பொதுமக்கள் கலந்துக்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான வெள்ளையர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.

அமெரிக்க வெள்ளையர்களை அடிப்படையாக கொண்ட ஒருவர், கறுப்பின சகோதரர் ஒருவரை கொலை செய்யப்பட்டிருந்தமைக்கு எதிராகவே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.