இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையில் 600 கர்ப்பிணிகளுக்குத் தொற்று!

இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையில் 600 கர்ப்பிணிகளுக்குத் தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலையில் மாத்திரம் 600 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரையில் 600 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்குக் கொரோனா ஏற்பட்டுள்ளது எனவும், கர்ப்பிணித் தாய்மார் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மகப்பேறியல் விசேட வைத்திய நிபுணர் மயுரம்மன டெவொலகே தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக அரச மருத்துவமனைகளில் நடத்தப்படும் மருத்துவ ஆலோசனைக் கூட்டங்களுக்குச் (கிளினிக்) செல்லச் சில தாய்மார் பயப்படுகின்றனர் எனவும், குழந்தையின் நலன் கருதி சிகிச்சைகளில் கலந்துகொள்ள வேண்டும் எஎனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார் மற்றும் கொரோனா தொற்றாத கர்ப்பிணித் தாய்மாரை வெவ்வேறாகக் கவனிப்பதற்கு அரச மருத்துவமனைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.