தெற்கைப் போல் வடக்கிலும் முகக்கவச பிரச்சாரம்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

நேற்று (28) யாழ்பாணம் மல்லாகம் பகுதியில்  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் இந்த முகக்கவசங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தெற்கில் பொதுஜன பெரமுன கட்சியினர் தமது கட்சி இலட்சனை பொறித்த முகக்கவசங்களை விநியோகிக்கும் நிலையில், யாழ் தேர்தல் மாவட்டத்திலும் முகக்கவசங்கள் ஊடாக பிரச்சார நடவடிக்கைளை முன்னெடுக்கப்பட்டுள்ளமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Comments are closed.