முள்ளிவாய்கால் நினைவிடம் இடிக்கப்பட்டமைக்கும், தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்கால் நினைவிடம் இடிக்கப்பட்டமைக்கும், தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார

ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் நினைவிடம் இடிக்கப்பட்டமையானது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என கூறிய அவர், அந்த விடயத்திற்கும் தமக்கும் அணுவளவேனும் தொடர்பு கிடையாது என கூறுகின்றார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் இந்த விடயத்தில் தலையீட போவதில்லை என இராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, பொலிஸாரினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில் மாத்திரமே, தம்மால் அந்த விவகாரத்தில் தலையீட முடியும் என கூறிய அவர், அதுவரை தம்மால் பல்கலைக்கழக விவகாரத்தில் தொடர்புப்பட முடியாது என தெரிவிக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.