USAid தலைமைக்கு பிடெனின் தேர்வு சமந்தா பவர்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்க தூதரான சமந்தா பவரை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சி (US Agency for International Development – USAid) தலைவராக நியமிக்க ஜோ பிடன் முடிவு செய்துள்ளார்.

ஒரு சர்வதேச நிதி நிறுவனமும், உலகளாவிய நெருக்கடிக்கு பலதரப்பட்ட விதத்தில் பங்களிக்கும் USAid க்கு செசமந்தா பவரின் அனுபவத்துடன் கூடிய இந்த தலைமை தேவை என ஜோ பிடன் நம்புகிறார்.

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பிடன் (13) புதன்கிழமை சமந்தா பவரை அப் பதவிக்கு நியமனம் செய்தார்.

USAidக்கு தலைமை தாங்க சமந்தா பவரை பரிந்துரைத்த ஜோ பிடன், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முதுகெலும்பாக தனது நாட்டின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை முறைப்படுத்த இவரை விட வேறு யாரும் இல்லை என்றும் வலியுறுத்தினார்.

பராக் ஒபாமா நிர்வாகத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதராக சமந்தா பவர் பணியாற்றினார்.

அவர் பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராகவும் 2009-2013 காலகட்டத்தில் இருந்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவில் அவரது சிறப்பான பங்கு யாதெனில் மனித உரிமைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு அவர் செய்த சேவையாகும்.

ஒபாமா நிர்வாகத்தின் போது சிரியாவில் ஏற்பட்டிருந்த நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு காண அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டதை கடுமையாக எதிர்த்த ஒரு பொது நபராக திருமதி சமந்தா அறியப்படுகிறார்.

கடந்த புதன்கிழமை, சமந்தா தேசியவாதத்தை மீறிய ஒருவராக பாராட்டப்படும் சமந்தா பவர் இப்படிச் சொன்னார்:

“எங்கள் பாதுகாப்பு நிலைமை எங்களிடமிருந்து அன்னியப்பட்டு தொலைவில் வாழும் மக்களின் பாதுகாப்போடும் தொடர்புடையது.

அமெரிக்காவில் நம்மில் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ள தொற்றுநோய்கள், பொருளாதார நெருக்கடிகள், காலநிலை நெருக்கடி, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தின் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் பலரும் எதிர்கொள்கிறார்கள்.” என்றார் அவர்.

மனித அழிவுகளிலிருந்து மக்களை காப்பாற்ற யு.எஸ் தவறியது எவ்வாறு என்பது குறித்து அவர் எழுதிய புத்தகமான A Problem from Hell புத்தகத்திற்காக புலிட்சர் பரிசையும் வென்றார்.

பணியால் முன்னாள் பத்திரிகையாளரான திருமதி சமந்தா, 1990 ல் போஸ்னியாவில் நடந்த போர் நிலைமைகளை வெளிக் கொண்டு வந்த மிக முக்கியமானவர்களில் ஒருவராவார்.

Leave A Reply

Your email address will not be published.