வவுனியாவில் நாளை நீர் வழங்கல் தடைப்படும் பிரதேசங்கள் அறிவிப்பு.

வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின்கீழ் வவுனியா நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ள நீரிணைப்புக் குழாய்களில் அவசர மேம்பாட்டினை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் நாளை சனிக்கிழமை (16.01.2021) காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை நீர் வழங்கல் செயற்பாடானது குறித்த பிரதேசங்களில் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் வவுனியா நகரம், குருமன்காடு, சூசைப்பிள்ளையார் வீதி, மற்றும் வைரவப்புளியங்குளம் பகுதிகளில் குறித்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் குறித்த பகுதிகளில் நீர் வழங்கல் செயற்பாடுகள் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.