கிழக்கு மாகாண மக்களின் குறைகளை ஆராய்கின்ற நிபுணர் குழுவின் கூட்டம்.

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கான ஆணைக்குழு ஒன்று கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத் தலைமையில் அமைக்கப்பட்டு செயல்ப்பட்டுவருகின்றது.

இன்று(18) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆளுனரின் விசேட ஏற்பாட்டில் இவ் விசேட நிபுணர் குழுவினர் வருகைதந்து மக்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

கிராமங்களின் அடிப்படை பிரச்சினைகள் பல ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதை அவதானித்த கிழக்கு மாகாண ஆளுனர் முயற்சியினால் இந்த நிபுணர் குழுவினை அமைத்து கிராமமட்டத்தில் இருந்து பிரதேசமட்டம் வரையிலான பிரச்சினைகளை ஆராய்ந்து பிரதேச செயலாளர்களினால் முறையான அறிக்கையைப்பெற்று அந்த மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியாகவே இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆளுனரின் இச் செயற்பாடானது கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து காணப்படுகிறது. மேலும் இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரன், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சனி முகுந்தன், இந் நிபுணர் குழுவின் தலைவர் திரு. வை. நானயக்கார , நிபுணர் குழுவின் உறுப்பினர்களான திரு. மோகன்ராஜா, திரு. பீ.றீ.ஏ ஹசன், திருமதி. கே. ஹெலன் மீகஸ்முல்ல, பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்தகொண்டனர்.

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.