வயது என்பது நம்பர் மட்டுமே, முதுமையல்ல என்கிறார் கேரளத்து ராஜனி சாண்டி : ஜோ

69 year old Malayalam actress Rajini Chandy’s makeover photos prove age is just a number
Rajini, at 69, has proved that age is just a number and that one does not require anyone’s approval to look bold and beautiful.

பெண்களுக்கு 50 வயது நெருங்கினாலே தாங்கள் வயதானதான மன நிலை ஏற்பட்டு விடுகிறது. தங்களை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒரு எதிர்பார்ப்பு மனதில் உருவாகத் தொடங்குகிறது. இப்படி ஆநேகர் இருந்தாலும் சிலர் விதி விலக்காகிவிடுகிறார்கள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அப்படியான ஒருவரான கேரளாவை சேர்ந்த 69 வயதான ராஜனி சாண்டி (Rajini Chandy) என்ற பெண் ‘ வனிதா’ என்ற இதழின் புகைப்பட ஆல்பத்தில் மனதை கொள்ளையடிக்கும் இளமையாக காட்சி தந்துள்ளார்.

ஏற்கனவே கேரளா பிக் பாலில் பங்கு பெற்றவர். இரு மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிந்த போது பலர் மிகவும் உற்சாகமான நல்ல பின்னூட்டம் கொடுத்த போது , சிலர் மிகவும் மோசமான கருத்தையும் பகிர்ந்திருந்தனர்.

இந்த பகிர்வை கண்ட மலையாளம் பி.பி.சி அதிர்ச்சியடைந்தது. இந்தியாவில் கல்வியில் முதலிடமும் முற்போக்கான சமூகமும் கொண்ட மக்கள் வாழும் பகுதி என நம்பும் மக்களிடமிருந்தா இவ்வளவு பிற்போக்குத்தனமாக பின்னூட்டம் வந்துள்ளது என சிந்திக்க தலைப்பட்டனர்.

இதனால் பி.பி.சி , ராஜினி சாண்டியிடம் நேர்முகம் கண்டுள்ளது.

அவர்களது கேள்விகளுக்கு சாண்டியின் பதில் இவ்வாறாக இருந்தது.

நான் ஆலுவா அல்போன்சா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த வேளையில் மும்பையில் வேலை பார்த்து வந்த போது 1970 ல் சாண்டியுடன் திருமணம் நடந்தேறியது.

அப்போதே மேல்நாட்டு உடை, வடநாட்டு உடை, நீச்சல் உடை என அணியத் தொடங்கிவிட்டேன். என் உடலை பற்றி எனக்கு நிறைய அக்கறை உண்டு. கொரோனா காலத்தில் பெண்கள் சோர்ந்திருக்கும் வேளையில், சோவுற்றிருப்போருக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற கருத்தில்தான் போட்டோ ஷூட்டில் பங்கு பெற்றேன். அவற்றை பதிவேற்றவும் செய்தேன்.

பெண்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் என் சமையலுக்கான காய்கறிகளை நானே பயிரிட்டேன். என் வேலைகளை நானே செய்கிறேன். உடலில் வயது ஏறலாம். அது பிரச்சனை இல்லை. ஆனால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

என் அன்பான கணவர், அமெரிக்காவில் தன் மகள் கணவருடன் வசிக்கும் ஒரு மகள் உண்டு.

தன்னுடைய எல்லா முன்னேற்றத்திலும் கணவர் ஸசாண்டியின் பங்கு உண்டு என்கிறார்.

தன் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பார்த்து மிகவும் வன்மமான கருத்துக்களை பகிர்ந்த பெருவாரியானோர் பெண்களே என்கிறார்.

கேரளம் அடிப்படை வாதத்தை நோக்கி நகர்வதை காணும் போது வருத்தமதக உள்ளது தெரிவிக்கிறார்.

ஆம் ! 69 வயதான மலையாள நடிகை ரஜினி சாண்டியின் மேக்ஓவர் புகைப்படங்கள் வயது என்பது ஒரு எண் என்பதை நிரூபிக்கின்றன.

– ஜோ

Leave A Reply

Your email address will not be published.