ஓட்டமாவடியிலிருந்து பாலமுனைக்கு பரிசுப் பொருள் போன்று கடத்தப்பட்ட கஞ்சா.

ஓட்டமாவடியிலிருந்து பாலமுனைக்கு
பரிசுப் பொருள் போன்று
பொதி செய்யப்பட்டு கடத்தப்பட்ட கஞ்சா.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு முச்சக்கர வண்டியில் 10 கிலோ கஞ்சா கடத்திய ஒருவரை மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் வைத்து இன்று (21) போக்குவரத்து பொலிஸார் கைது செய்ததாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி பிள்ளையாரடி பகுதியில் இன்று போக்குவரத்து பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களுடன் பிஸ்கட் பெட்டிகளில் பரிசுப் பொருட்கள் போன்று கஞ்சாவை சூட்சகமாக பொதி செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்ததுடன் 10 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.

இது தொடர்பாக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.