பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு ஏன் உறுப்பினர்களை நியமிக்கபடவில்லை? மஹிந்தவுக்கு சேவையாளர்கள் சங்கம் கடிதம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர்கள் சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரும் தங்களது இராஜிநாமாக் கடிதங்களை வழங்கி ஒரு மாதத்துக்கும் மேலாகின்ற நிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்பது தொடர்பில் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்குரியது என்றும், நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ள நிலையில், வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன எனவும் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.