காணி முறைகேடு தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் பிரிவு.

காணி முறைகேடு தொடர்பில்
ஆராய விசேட பொலிஸ் பிரிவு.

அமைச்சர் சந்திரசேன தெரிவிப்பு

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய காணி தொடர்பான முறைகேடுகள் குறித்து ஆராய காணி அமைச்சின் கீழ் விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தனிநபர்களினாலும் தோட்ட நிறுவனங்களினாலும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இந்தப் புதிய பிரிவின் ஊடாக எந்தவொரு அரசியல் மற்றும் தனியாரின் தலையீடும் இன்றி காணிகளை மீட்டு நிலமற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, காணி தொடர்பான முறைகேடுகள் குறித்து திணைக்களத்துக்குத் தெரிவிக்க 1931 என்ற விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்குப் பணிப்பாளராக ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுத்துறையின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் புதிய பிரிவுக்குத் தலைமை தாங்க இரண்டு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.