ஒன்பது அருட்தந்தையர்களுக்கு கொரணா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மட்டக்குளி பிரதேசத்தில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா.

மட்டக்குளி பிரதேசத்தில் தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தேவாலயத்திற்கு அருகில் மேலும் 50க்கும் அதிகமான அருட்தந்தையர்கள் வசிப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

முகக்கவசம் இல்லாமல் சுற்றித்திரிந்த 30 பேரை பிடித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 யாசகர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இருவரும் இனங்காணப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட 302 பிசிஆர் பரிசோதனையில் 5 நோயாளர்கள் கண்டுபிடிக்கபபட்டுள்ளனர்.

அதேபோல் மட்டக்குளி பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மேலும் 50 க்கும் அதிகமான சகோதர அருட்தந்தையர்கள் பயின்று வருகின்றனர்.

அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலைமை காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளுக்கு செல்லும் போது பொதுமக்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.