இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து 5 லட்சம் தடுப்பு மருந்துகள் சென்றடைந்ததற்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நன்றி தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு உள்நாட்டு தயாரிப்புகளான கொரோனோ தடுப்பு மருந்துகள் அண்டை நாடுகளான வங்காளதேசம், பூடான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்தியாவில் இருந்து ஏர்இந்தியா விமானம் ஒன்றில் கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டன.  சற்று காலதாமதம் ஆக விமானம் புறப்பட்டு சென்றது.  இந்நிலையில், மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் கூறும்பொழுது, இந்தியாவின் நம்பக தன்மை கொண்ட பங்குதாரர்.  நம்பிக்கைக்குரிய நண்பர்.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இலங்கையை சென்றடைந்து உள்ளன என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்துகள் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சேவிடம் வழங்கப்பட்டன.அதனை பெற்று கொண்ட பின்னர் ராஜபக்சே கூறும்பொழுது, இந்திய மக்கள் வழங்கியுள்ள கொரோனாவுக்கான 5 லட்சம் தடுப்பு மருந்துகள் இலங்கையை வந்தடைந்து உள்ளன.  இலங்கை மக்களுக்கு தேவையான இந்நேரத்தில் பெருந்தன்மையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.