பால் காய்ச்சுற டெக்னிக்: சுவையான கெட்டித் தயிர் ரகசியம்

Curd Making: இது தை மாதம் என்றாலும் இப்போதே பல இடங்களில் வெயில் வெளுக்கத் தொடங்கிவிட்டது. வெயிலின் வெப்பத்தை சமாளிக்க தயிர், மோர் போன்றவை அவசியம் தேவையானதாக உள்ளது. கடைகளில் வாங்குகிற தயிர் எப்படி தயாரிக்கிறார்களோ என்று பலரும் ஐயம் கொள்வதால் வீட்டிலேயே தயிர் போட முயற்சித்து சரியாக வராமல் தோல்வி அடைகின்றனர்.

நீங்கள் வீட்டிலேயே சுவையாக கெட்டித் தயிர் தயாரிக்க விரும்புகிறீர்களா? அதற்கு பால் எப்படி காய்ச்ச வேண்டும் என்ற பக்குவம் தெரிந்திருக்க வேண்டும்.

சுவையான கெட்டித் தயிர் தயாரிப்பதற்கு பால் எப்படி காய்ச்சவேண்டும் என்ற டெக்னிக் இதோ உங்களுக்காக…

சுவையான கெட்டி தயிர் வீட்டிலெயே தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்: 1 லிட்டர் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை: 1 லிட்டர் பாலை சிறிதுகூட தண்ணீர் ஊற்றாமல் நன்கு சுண்டக் காய்ச்சுங்கள். பின்னர், பால் காய்ந்ததும் வெப்பம் சூடு முற்றிலும் குறையும் வரை ஆற விடுங்கள்.
பிறகு, முழுவதும் சூடு குறைந்ததும் நுரை வருமாறு 4 -5 முறை பாலை ஆற்றுங்கள். அதன் பிறகு, அந்த பாலில் ஒரு ஸ்பூன் தயிரைக் கலந்துவிடுங்கள். ஸ்பூனால் நன்கு கலக்குங்கள். இதையடுத்து, பாலை சில்வர் அல்லது மண் சட்டியிலோ மாற்றி தட்டு போட்டு மூடிவிடுங்கள். எட்டு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான கெட்டியான தயிர் தயாராக இருக்கும்.

குறிப்பு: தயிர் உறை ஊற்றும் வேலையை இரவில் செய்வது நல்லது.

Leave A Reply

Your email address will not be published.