தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பவித்ராவுக்குச் செயற்கைச் சுவாசம்

கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொழும்பு தேசிய தொற்று நோய் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுகாதார அமைச்சர் ஆபத்தான நிலையில் இல்லை என்று அவரது கணவர் காஞ்சன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால்தான் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குணமடைந்து வருகின்றார். அவருக்கு அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார் எனவும் காஞ்சன ஜெயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் கொக்கலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் கொழும்பு தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதேவேளை, சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.