“குழந்தைகளுக்கான மரத்தோட்டம்” தேசிய மர நடுகைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

“குழந்தைகளுக்கான மரத்தோட்டம்” தேசிய மர நடுகைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

2021.02.15 ம் திகதி பாடசாலைக்கு புதிதாக வருகை தரவிருக்கும் தரம் 01 மாணவர்களுக்கான நாடு பூராகவும் ஒவ்வொரு பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கும் குழந்தைகளுக்கான மரத்தோட்டம் தேசிய மர நடுகைத்திட்டம் தொடர்பான அறிமுக கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் சிறிய மாநாட்டு மண்டபத்தில் கடந்த 26ம் திகதி பி.ப1.30மணிக்கு சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

விவசாய திணைக்களம், கல்வித் திணைக்களம், மாவட்ட செயலகம், கமநல சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து இத் திட்டத்தை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்திலுள்ள 61 பாடசாலைகளின் 1374 மாணவர்களும், துணுக்காய் கல்வி வலயத்திலுள்ள 54 பாடசாலைகளின் 550மாணவர்களுமாக 115 பாடசாலைகளுக்கும் தலா ஒவ்வொரு மரக்கன்றுகன்றுகளுமாக மாவட்டத்தில் 2039 பழமரக்கன்றுகள் இத் திட்டத்தின் கீழ் நாட்டி வைக்கப்படவுள்ளன.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், வலயக் கல்வித்திணைக்களங்களின் ஆரம்பப் பிரிவு உதவிப்பணிப்பாளர்கள், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.