இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் வந்தது கிழக்கு முனையம்!அமைச்சரவை அனுமதி.

இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் வந்தது கிழக்கு முனையம்!அமைச்சரவை அனுமதி.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் முழுமையாக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது.

மேலும், மேற்கு முனையத்தைத் தனியார் நிறுவனமொன்றுடன் இணைந்து முன்னெடுப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக் கையளிப்பதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் குறித்து முடிவு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு முனையத்தை மூன்று கட்டங்களில் அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதேவேளை, மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்றுக் காலை நடைபெற்ற கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களுடனான சந்திப்பின்போது, கிழக்கு முனையம் நூறு வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.