நாட்டில் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது.

அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு.

நாட்டில் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகவும், அவை மூன்று மாத காலத்திற்கு பராமரிக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், விலை குறைப்பு திங்கள் (08) முதல் நடைமுறைக்கு வரும்.

குறிப்பிடப்பட்ட பொருட்கள் லங்கா சாதொச, கூட்டுறவு மற்றும் க்யூ-ஷொப் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று இன்று (05) வர்த்தக அமைச்சகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

சிகப்பு அரிசி (ரத்து கெகுலு) 1kg : புதிய விலை 93 ரூபா – தற்போதைய விலை 106 ரூபா

வெள்ளை பச்சரிசி 1kg : புதிய விலை 93 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா

நாட்டரிசி (சுது நாடு) 1kg : புதிய விலை 96 ரூபா – தற்போதைய விலை 109 ரூபா

சம்பா 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 120 ரூபா

கீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

கோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா

​வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 110 ரூபா

சிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

தேயிலை 100g : புதிய விலை 95 ரூபா – தற்போதைய விலை 130 ரூபா

பருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா – தற்போதைய விலை 188 ரூபா

பெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

உருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா – தற்போதைய விலை (216 – 220) ரூபா

உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 190 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

கடலை 1kg : புதிய விலை 225 ரூபா – தற்போதைய விலை 175 ரூபா

காய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா – தற்போதைய விலை 550 ரூபா

ரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா – தற்போதைய விலை 240 ரூபா

ரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா – தற்போதைய விலை 280 ரூபா

நெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 545 ரூபா – தற்போதைய விலை 700 ரூபா

தோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா – தற்போதைய விலை 430 ரூபா

கட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 55 ரூபா

பால்மா 400g : புதிய விலை 355 ரூபா – தற்போதைய விலை 380 ரூபா

​சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா – தற்போதைய விலை 470 ரூபா

சவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 53 ரூபா

சவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா – தற்போதைய விலை 325 ரூபா

வாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா – தற்போதைய விலை 63 ரூபா

கை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 100ml : புதிய விலை 250 ரூபா – தற்போதைய விலை 350 ரூபா

முகக்கவசம் (SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : புதிய விலை 14 ரூபா – தற்போதைய விலை 25 ரூபா

Leave A Reply

Your email address will not be published.