சசிகலாவுக்கு கார் வழங்கியவர் உள்பட 7 பேர் நீக்கம்; இபிஎஸ்- ஓபிஎஸ் நடவடிக்கை

சசிகலா வருகையை தமிழகத்தின் மொத்த அரசியல் வட்டாரமும் உற்றுக் கவனிக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து திரும்பும் சசிகலா, அரசியல் ரீதியாக உருவாக்கும் தாக்கமே இதற்கு காரணம்.

2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற சசிகலா, 2021 ஜனவரி 27 அன்று விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு சிகிச்சை, பெங்களூரு ரிசார்ட்டில் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை முடித்துக்கொண்டு இன்று (பிப்ரவரி 8) தமிழகம் திரும்புகிறார்.

சசிகலா சென்னை வந்தால் நேரடியாக செல்ல விரும்புகிற இடம் ஜெயலலிதா நினைவிடம்தான். ஆனால் அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, பூட்டி வைத்திருக்கிறது அரசு. ஜெயலலிதாவுடன் சசிகலா வசித்த போயஸ் கார்டன் இல்லமும் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டது. இவை தவிர, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினால் நடவடிக்கை கோரி மூத்த அமைச்சர்கள் டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதிமுக தரப்பின் இது போன்ற நடவடிக்கைகள் சசிகலா வருகையை இன்னும் அதிக முக்கியத்துவம் உரியதாக மாற்றியிருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.