இலங்கையில் புதிதாக 12 பேருக்கு கொரோனா

இலங்கையில் இன்று (02) இதுவரை 12 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,066 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட 12 பேரில் ஐவர் கட்டாரில் இருந்தும், இருவர் இந்தியாவில் இருந்தும் அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 228 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,827 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.