ஐ.பி.எல்.: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்!

ஐ.பி.எல்.: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) டி-20 தொடரில் இடம்பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அதன் பெயரை மாற்றியுள்ளது.

லீக்கின் 14ஆவது பதிப்பிலிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தன்னை ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று அழைக்கும்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (பி.சி.சி.ஐ) முறையான தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஒப்புதலும் பெறப்பட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.

மோஹித் பர்மன், நெஸ் வாடியா, பிரீத்தி சிந்தா மற்றும் கரண் பால் ஆகியோருக்குச் சொந்தமான இந்த அணி உரிமையானது, 13 ஆண்டுகால லீக் வரலாற்றில் ஒரு மூன்றாம் இடத்தையும் ஒரு இரண்டாவது இடத்தையும் மட்டுமே பெற்றுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான ஏலம், சென்னையில் நடைபெறவுள்ளது.
ஏலத்தில் 164 இந்தியர்கள் உட்பட 292 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.