கடற்படைத்தளம் அமைக்க காரைநகரில் மீண்டும் காணி அளவீடு!

கடற்படைத்தளம் அமைக்க காரைநகரில் மீண்டும் காணி அளவீடு!தடுத்து நிறுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு.

யாழ். காரைநகர் பகுதியில் கடற்படைத்தளம் ஒன்றை அமைப்பதற்கு 50 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு அளவீடு செய்யப்படவுள்ளது.

காரைநகர் ஜே.45 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 61 தனியார் குடும்பங்களுக்குச் சொந்தமான 51 ஏக்கர் அளவுடைய காணி இவ்வாறு நில அளவைத் திணைக்கள்தினரால் அளவீடு செய்யப்படவுள்ளது.

கடந்த காலங்களில் மயிலிட்டிப் பகுதி மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட நீலங்காடு பகுதி கடற்படையினரின் ஆக்கிரமிப்பால் மீன்பிடி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், எலறா கடற்படைத்தளத்துக்காகத் தனியாருக்குச் சொந்தமான நீலங்காடுப் பகுதியில் உள்ள 51 ஏக்கர் காணி கையகப்படுத்தும் நோக்கில் நாளை அளவிடப்படவுள்ளது.

ஆகவே, குறித்த காணி அளவீடு செய்யும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த நாளை காலை அப்பகுதி மக்கள் மற்றும் சிவில் சமூகத்தினர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எலறா கடற்படைத்தளத்துக்காக நேற்றுப் புதன்கிழமை காலை காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான காணியை அளவீடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.