உலக வங்கியின் நிரல்படுத்தல் அறிக்கையில் இலங்கை வீழ்ச்சி

உலக வங்கியினால் நிரல்படுத்தப்பட்டுள்ள புதிய வருமான அறிக்கையில் இலங்கை வீழ்ச்சி நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூடிய வருமானம் பெறும் நாடு என்ற நிலையிலிருந்து, குறைந்த வருமானம் பெறும் நிலை வரை இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் தரவரிசையில் இலங்கையுடன் அல்ஜீரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தில் தனிநபருக்கான வருமானம் 4,060 டொலராகக் காணப்பட்ட அதுவேளை அது இந்த வருடத்தில் 4,020 டொலராக குறைவடைந்துள்ளதாக உலக வங்கியின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.