கனடாவில் இருந்து 21 கோடி வரவில்லை – த.தே.கூ கனடாக் கிளைத் தலைவர்

தமிழ் அரசுக் கட்சியின் கனடாக் கிளை மூலம் 2010 போர் முடிவிற்கு பின்னர் கட்சிக்காக பல்வேறு சந்தர்பங்களில் அனுப்பிய பணத்தின் மொத்தப் பெறுமதியே 5 கோடி ரூபாவினையும் தாண்டவில்லை என தமிழ் அரசுக் கட்சியின் கனடாக் கிளைத் தலைவர் வேலுப்பிள்ளை – தங்கவேல் தெரிவித்தார்.

கனடாவில் இருந்து மகளீரின் மேம்பாட்டிற்காக நாம் 21 கோடி ரூபா பணத்தை அனுப்பிய நிலையில் கட்சியில் உள்ள சிலர் அபகரித்து விட்டனர் என்னும் தோறனையில் மகளிர் அணியை சேர்ந்த விமலேஸ்வரி அண்மையில் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உண்மையில் 2010ஆம் ஆண்டின் பின்னர் புனரமைக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் கனடாக் கிளையில் உறுப்பினராக , காப்பாளராக தற்போது வரை தலைவராக பணியாற்றுகின்றேன். கனடாக் கிளையில் எம்முடன் சுமார் 100 அங்கத்தவர்களும் அதேயளவு நெருங்கிய ஆதரவாளர்களும் ஒன்றித்து செயல்படுகின்றோம்.

இவ்வாறு செயல்படும் நிலையில் போரின் பின்பு பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவியில் அதிகமாக வன்னிப்பகுதியிலேயே கவனம் செலுத்தினோம் அதில் கிளிநொச்சி , முல்லைத்தீவு , திருகோணமலை மாவட்டங்களே கானப்பட்டது. இதற்காக பல கட்டமாக கிளிநொச்சிக்கு 25 லட்சம் ரூபாவும் , முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு 48 லட்சம் ரூபாவும் மட்டுமே வழங்கினோம் . எந்தக் காலத்திலும் கோடி ரூபாவை காணவில்லை.

இவற்றின் பின்பு 2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தேர்தல் செலவிற்காக 24 லட்சம் ரூபா வழங்கினோம் . அதே நேரம் எம்மால் அதிக தொகை பணம் வழங்கிய சந்தர்ப்பம் எனில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் செலவிற்காக 40 ஆயிரப் கனேடிய டொலராகும் இது இலங்கை நாணயத்தில் 60 லட்சத்தை தொடும். 2018 உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்காக ஓர் 15 லட்சம் ரூபா வழங்கினோம். இவற்றினை விட ஓர் இரு சிறு உதவிகளே வழங்கினோம் . எக் காலத்திலும் கோடிகளில் பணம் வழங்கவில்லை. இவைகளும் கட்சிக்கான பணமாகவும் அனுப்பப்படவில்ல சில பணியின் நிமித்தமே வழங்கப்பட்டது.

இவ்வாறு 2010ஆம் ஆண்டில் இருந்து சகல தேவைக்காக வழங்கிய பணத்தையும் கூட்டினாலும் 5 கோடி ரூபாவைக்கூட காண முடியாது 3 அல்லது 4 கோடி ரூபா பணமே கிடைக்கும். இந்த நிலையில் தாயகத்தில் இருந்து செயல்படும் பெண்மனி எதன் அடிப்படையில் இந்தக் கூற்றை கூறுகின்றாரோ நாம் அறியோம். இவ்வாறு கனடாவில் இருந்து அனுப்பி நிதிகளில் குகதாசனின் பங்கு மிகவும் அளப்பரியது

இவற்றிற்கும் அப்பால் திருகோணமலை உள்ளிட்ட பல இடங்களில் உள்ளூர் அமைப்புக்கள் ஊடாகவே பொதுப்பணிகளாக வீடமைப்பு , கிணறுகள் , பண்ணை என அமைத்து வழங்கினோமே அன்றி அந்தப் பணக் கொடுக்களிற்கும் கட்சியின் தலமைக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. இதற்கான கணக்குகளை பணத்தை வழங்கிய நாம் எந்த அமைப்பின் ஊடாக வழங்கினோமோ அவர்களிடத்திலேயே கோரிப் பெறுகின்றோம். என்றார்.

Comments are closed.