மஹேல ஜயவர்தனவிற்கு இன்று அழைப்பு. நேற்று சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம்

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார நேற்யை தினம் விசாரணை மேற்கொள்ளும் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நேற்று காலை 9 மணிக்கு விசாரணை மேற்கொள்ளும் குழுவில் முன்னிலையான குமார் சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்களுக்கும் மேல் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக இன்றைய தினம் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவேளை, இலங்கை அணியின்; வீரர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.