இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை உறுதி.பிரதான நாடுகள் கூட்டறிக்கை.

இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை உறுதி.பிரதான நாடுகள் கூட்டறிக்கை

இலங்கையில் பொறுப்புடைமை, நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கமான சமாதானத்துக்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகளான கனடா, ஜேர்மனி, வட மசிடோனியா, மொன்டனீக்ரோ மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன கூட்டாகத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அந்த நாடுகள் கூட்டிணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை மக்களுக்கு தமது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள், இலங்கையில் பொறுப்புடைமை, நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கமான சமாதானத்துக்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றன.

உட்கட்டமைப்பு வசதிகளை மீளக்கட்டியெழுப்பல், கண்ணிவெடி அகற்றல், நிலங்களை மீள ஒப்படைத்தல் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பவற்றில் இலங்கை அரசு எட்டியுள்ள தேர்ச்சியை நாம் அங்கீகரிப்பதுடன் வரவேற்கின்றோம்.

எவ்வாறாயினும், போரின் தீங்கு விளைவிக்கும் மரபுகளை அடையாளப்படுத்துவதற்கும், நாட்டில் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பது தெளிவாகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான அறிக்கை குறித்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை இந்த மாதத்தில் கவனம் செலுத்தும்.

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை அரசுடன் ஒத்துழைப்புடனும், ஆக்கபூர்வமாகவும் பணியாற்றியமை இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகளுக்கு முக்கியமானதாக இருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையை அடையாளப்படுத்துவதற்கான தொடரும் முக்கியத்துவத்தை இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் மீள வலியுறுத்துகின்றன.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவாறு, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசிக்கின்றன” என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.