மியான்மார் சுரங்கத்தில் மண்சரிவு – 160ற்கும் மேற்பட்டோர் பலி

மியான்மாரின் கச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகந்த் மரகதக்கல் சுரங்கத்தின் உள்ளே இடம்பெற்ற மண்சரிவினால் 160 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வீழ்ச்சியின் போது தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் மேல் மண்மேடு விழுந்தமையினால் அதிகமானோர் மரணிக்க நேரிட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் உதவியுடன் சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மரணித்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

Comments are closed.