சிம்பு – நயன் கெமிஸ்ட்ரி செமை.. வர்ணித்த விக்னேஷ் சிவன் : வில்லங்கமான பதிவு

ஏற்கனவே சமீபகாலமாக சிம்பு மற்றும் நயன்தாரா பற்றிய வதந்திகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இருவரது காதலைப்பற்றி விக்னேஷ் சிவன் புகழ்ந்து தள்ளிய பதிவொன்று தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு மற்றும் நயன்தாரா இடையே காதல் தீ பற்றிக்கொண்டது. அது மோகத்தீயாக மாறி இருவரும் காதல் மயக்கத்தில் கண்ணா பின்னான்னு இருந்தனர். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

மேலும் பல இடங்களில் நயன்தாராதான் சிம்புவை விட்டு விட்டு போனதாக கூறினார். சிம்புவும் பல பேட்டிகளில் தன்னை புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டு சென்றுவிட்டாள் என புலம்பியிருக்கிறார். அந்தக் காதல் மலையேறிய பிறகு தற்போது இருவரும் அவர்களது சினிமா வாழ்க்கையை பார்த்து வருகின்றனர்.

மேலும் இருவரும் தங்களுடைய முதல் காதல் தோல்விக்குப் பிறகு பல காதல்கலை பார்த்து விட்டனர். கடைசியாக நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இது கூட இன்னும் கொஞ்ச நாள் தான் என சமீபத்தில் பிரபலம் ஒருவர் கூறியது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸின்போது நயன்தாரா மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் எனவும், அதற்கு 100% மார்க் தரலாம் என்பது போன்ற பதிவை போட்டுள்ளார்

இதை தற்போது இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். வருங்காலத்தில் தனக்கு நயன்தாரா காதலியாக வருவார் என்று தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு விக்னேஷ் சிவன் போட்ட பதிவு ஒன்று தற்போது அவருக்கு வில்லனாக மாறி விட்டது.

Leave A Reply

Your email address will not be published.