அஜித் நிவாட் கப்ரால் நாளை யாழ். விஜயம்!

நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்  உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார்.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ள நிலையில், பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் இடம்பெறவுள்ள காலை நேர விருந்துபசாரத்தில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கலந்துகொள்ளவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு இனிவருங் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை உள்வாங்கும் அரசின் திட்டத்துக்கு அமைய, யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள வசதி, வாய்ப்புகள் மற்றும் வளங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இராஜாங்க அமைச்சர் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கு வருகின்ற இராஜாங்க அமைச்சர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், நிதியாளர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.