இயேசுவாக நடித்துள்ள கமல்…… (Video)

50 வருடத்திற்கு முன்னதாகவே இயேசுவாக நடித்துள்ள கமல்..

தமிழ் சினிமாவின் நடிப்பு நாயகன் என்றால் அது கமல்ஹாசன் தான். ஏனென்றால் இவர் ஏற்றுக் நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு தனது படங்களில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

கமல்ஹாசன் ஒரு பேட்டியில் என்னை பொருத்த வரைக்கும் படம் வெற்றி பெற்றாலோ, வசூல் பெற்றாலோ வெற்றி கிடையாது, என்னையும் தாண்டி அந்தப்படம் இவ்வுலகில் பேசுமே ஆனால் அதுவே வெற்றி என கூறினார். அந்த வசனத்திற்கு ஏற்ப இவரது அனைத்து படங்களுமே காலத்திற்கும் பேசக்கூடிய படங்களாகவே உள்ளது.

1971 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், சிவகுமார் மற்றும் ஜெயலலிதா போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த அன்னை வேளாங்கண்ணி எனும் படத்தில் கமல் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் கமல்ஹாசன் ஜீசஸ் வேடத்தில் நடித்திருப்பார், இது பலருக்கும் தெரியாத ஒரு கதாபாத்திரம் தான். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் சிறுவயதில் நடித்த பிறகு பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2. இப்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.