இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 யில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று தொடங்கியது. இதற்கான நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரரான கேஎல் ராகுல் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்ட் முறையில் வெளியேறினார்.

அடுத்து வந்த கப்டன் விராட் கோலி 5 பந்துகளில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் அடல் ரஷித் பந்து வீச்சில் வெளியேற, தவான் 4 ரிஷப் பந்த் 21 என அடுத்தடுத்து வெளியேறினர்.

இந்நிலையில் ஹர்த்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 36 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யரின் சிக்சர் மூலம் இந்திய அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை கடந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்து வீச்சில் கேட்ச் முறையில் அவுட் ஆனார். அடுத்த ஆட்டக்காரராக அக்சர் படேல் வருவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். அவர் வந்த முதல் பந்திலேயே பிடி கொடுத்து கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.

கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். அக்சர் படேல் 7 ரன்னிலும் சுந்தர் 3 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், அடில் ரஷித், ஜோர்டான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 125 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜோசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

ஜாசன் ரோய் இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் 4 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இந்நிலையில் சாஹல் வீசிய 8 வது ஓவரில் ஜாஸ் பட்லர் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்ததையடுத்து இந்த ஜோடி பிரிந்தது. ஜோஸ் பட்லர் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 28 ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மலானுடன் ஜோசன் ரோய் ஜோடி சேர்ந்தார். ஆட்டத்தின் 12வது ஓவரில் அரைசதத்தை நெருங்கிய ஜோசன் ரோய்(49 ரன்கள்), வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ. ஆகி விக்கெட்டை இழந்தார். இதையடுத்து டேவிட் மலான்(24 ரன்கள்), ஜோனி பேர்ஸ்டோ(26 ரன்கள்) இருவரும் இறுதிவரை நிலைத்து நின்று ஆடி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதியாக 15.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இன்றைய முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.