3 மாதங்களின் பின்னர் கற்பித்தல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்

கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று முதல் செயற்பட இருக்கின்றன.

கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நான்கு கட்டங்களின் கீழ் வழமைக்கு கொண்டு வரும் திட்டத்திற்கமைவாக இரண்டாம் கட்டம் இன்று இன்று முதல் செயல்படுகின்றது.

இதன்படி தரம் 5, 11, 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்மாகின்றன.

தரம் 5 முதல் 11 வரையான மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து, பி.ப 1.30 மணிவரை இடம்பெறும் அதேவேளை தரம் 13 மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை இடம்பெறுவுள்ளது.

ஆசிரியர்கள் தங்களுக்குரிய கற்பித்தல் செயல்பாடுகள் ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக பாடசாலைக்கு சமூகமளித்தால் போதுமானது.

அத்துடன் இன்று முதல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கே முன்னுரிமையளிக்க வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Comments are closed.