கரும்புலிப் பதாகையுடன் கிளிநொச்சியில் ஆசிரியர் கைது

கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் கடந்த 03ம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்தமை தொடர்பில் ஆசிரியை ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடையப் பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறித்த ஆசிரியையை கைது செய்துள்ளனர்.

இந்த வெடிச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சுற்றி பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பிளாஸ்ரிக் குண்டுகள் 2, கரும்புலி நாள் பதாதை 1, தொலைபேசி 1, மடிக்கணணி 1, டொங்குள் 1, இறுவெட்டு 1 ஆகியவைகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

Comments are closed.