விசேட சுற்றிவளைப்பில் 470 பேர் போதைப் பொருட்களுடன் கைது

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தவிர வேறு குற்றங்கள் இழைத்த 23 பேரும் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவதாகவும் குற்றத் தடுப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் உத்தரவின் அடிப்படையில் நேற்று (04) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.