ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் பகுதியில் உள்ள நெல் களஞ்சியத்துக்கு சென்ற மகிந்தானந்த அளுத்கமகே.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று (17.03.2021) மாலை விஜயம் மேற்கொண்ட விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் பகுதியில் உள்ள நெல் களஞ்சியத்துக்கு சென்று அங்கு இடம்பெறும் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை பார்வையிட்டு குறைநிறைகளை கேட்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பகுதியில் இன்னும் நெல் கொள்வனவு செய்ய முடியும் எனவும், களஞ்சியம் நிறைந்துள்ளது எனவும் நெல்லினை வேறு களஞ்சியத்துக்கு மாற்றுவதற்கு பார ஊர்திகள் தந்தால் இன்னும் நெல்லினை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக பாரஊர்திகள் வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து மக்களிடம் இருக்கும் நெல்லினை கொள்வனவு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு அங்கு பணிபுரியும் ஊழியர்கள், விவசாயிகளுடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டு பணியாளர்கள், விவசாயிகளுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எதிர் பார்க்கின்றோம் 3 இலட்சம் மெற்றிக்தொன் நெல்லை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள இதனை நிறுத்த பல்வேறு தரப்புக்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஆனாலும் நெற்செய்கையாளர்கள் ஆயிரக்கணக்கில் வருகை தந்து நெல்லினை அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்றனர்.

நான் இப்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள நெல் களஞ்சியத்தில் இருக்கிறேன் இங்கு களஞ்சியம் நிறைந்துள்ளது. அந்தளவுக்கு மக்கள் நெல் வழங்கியுள்ளனர். அதேபோல் நெல்செய்கையாளர்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு நெல்லை வழங்க வேண்டும் என்ற உணர்வு உள்ளதை நான் பார்க்கிறேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.