பங்களாதேஷ் பிரதமரினால் இலங்கை பிரதமருக்கு மகத்தான வரவேற்பு!

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (2021.03.19) முற்பகல் பங்களாதேஷ் பயணித்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு, பங்களாதேஷ் குடியரசின் கௌரவ பிரதமர் திருமதி.ஷெய்க் ஹசீனா அவர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

பங்களாதேஷ் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இராணுவத்தினரின் கௌரவ அணிவகுப்பும் இலங்கைப் பிரதமரை வரவேற்கும் முகமாக நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமர் திருமதி.ஷெய்க் ஹசீனா அவர்களினால் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பங்களாதேஷ் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை, இலங்கை பிரதமருக்கு அறிமுகப்படுத்தியதுடன், இலங்கை பிரதமரினால் இலங்கை தூதுக்குழுவினர் அந்நாட்டு பிரதமருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.