இரு நகரங்களில் போலீசாரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 12 போலீசார் உள்பட 17 பேர் உயிரிழப்பு.

மெக்சிகோ சிட்டிக்கு வெளியே சிறிது தூரத்தில் பதுங்கியிருந்து துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், 13 போலீசார் உள்பட 17 பேரை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடெபெக் ஹரினாஸ் நகரில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான வாகனத்தின் மீது போதைபொருள் கடத்தல் கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது.இதில் வாகனத்தில் இருந்த 8 போலீசாரும், 5 அரசு வழக்கறிஞர் அலுவலக ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாக்குதல் நடந்த கோடெபெக் ஹரினாஸ் நகருக்கு அருகில் உள்ள அல்மொலொயா நகரில் நடந்த மற்றொரு தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் மெக்சிகன் அரசுக்கு அவமரியாதை என்றும் இதற்கு சட்டத்தின் ஆதரவுடன் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று நாட்டின் பாதுகாப்பது அமைச்சர் ரோட்ரிகோ மார்டினெஸ்-செலிஸ் கூறியுள்ளார்.

மெக்சிகோவின் தேசிய காவல்படை, இராணுவமயமாக்கப்பட்ட போலீசும், ஆயுதப்படைகளும் குற்றவாளிகளை தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நாட்டின் முக்கிய போதைப்பொருள் விற்பனையாளர்களில் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.